தமிழ் சினிமாவில் மிகவும் புகழப்பட்ட எடிட்டர் டி.ஆர். சேகர் தனது 81 வைத்து வயதில் மாரடைப்பில் காலமானார்.இவரது மறைவிற்கு திரை துறையினர் பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மறைந்த எடிட்டர் சேகர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் 200 படங்களுக்கு மேலாக பணியாற்றியவர்.இன்றுவரை அழிய புகழ் பெற்ற வருஷம் 16,காதலுக்கு மரியாதையை,பூவே பூச்சூடவா,பூவிழி வாசலிலே,அரங்கேற்ற வேலை,என்பன போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.கேரளா மற்றும் தமிழகத்தில் இவரது பணிக்காக அரசு விருதுகள் பெற்றவர்.
இவர் கடைசியாக பணியாற்றிய படம் சாது மிரண்டா, அதன் பின் திரையை தவிர்த்து ஓய்வுக்காக திருச்சியில் குடியேறி விட்டார்.இந்நிலையில் இவரது மரணம்,தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு என்று கோலிவுட் வட்டாரம் வருத்தம் தெரிவிக்கிறது