சில மாதங்களுக்கு முன்னர் உலகை உலுக்கிய செய்திகளில் இதுவும் ஒன்று. சில்லி நாட்டில் உள்ள மலை அடிவாரத்தில் இந்த எலும்புக் கூட்டை சிலர் 2003ம் ஆண்டு முதல் பாதுகாத்து வந்தார்கள். வெறும் 6 இஞ்சி உயரம் கொண்ட இந்த எலும்புக் கூட்டை விஞ்ஞானிகள் கைப்பற்றி ஆராட்சி நடத்தினார்கள்.
இது கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விடையம். அதிர்வு இணையமும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு இருந்தது. குறித்த எலும்புக் கூட்டில் உள்ள மரபணுக்களை பரிசோதனை செய்த விஞ்ஞானிகள் சற்றுக் குழம்பிப்போய் இருந்தார்கள். ஏன் எனில் சரியா முடிவை எட்ட முடியவில்லை.
ஆனால் தற்போது அவர்கள் இறுதியாக மேற்கொண்ட ஆய்வில், இது மனிதருடைய சிசு என்றும். கருவில் உருவாகி சில மாதங்களில் அது வெளியே எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறிந்துள்ளார்கள். பெண்ணாக பிறக்க வேண்டி இச் சிசு எவ்வாறு இறந்தது ? எப்படி கருவை விட்டு வெளியே வந்தது என்பது ஒரு புரியாத புதிராக இருக்க. அதன் தலை மற்றும் ஏனைய அங்கங்கள் மனித உருவில் இல்லை என்பது தான் மிகவும் ஆச்சரியமான விடையம்.
இதனை முன்னரே அறிந்து ஆதிவாசிகள் கருவை கலைத்தார்களா ? அப்படி என்றால் அவர்களுக்கு இது எப்படி தெரியும் ? என்பது போன்ற பல கேள்விகளுக்கு இன்றும் விடை இல்லை.