Loading...
தாய்லாந்தில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் நாகோன் ரட்சசிமா மாகாணத்தில் 50 பயணியருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த பெரிய மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
Loading...
இந்த கேர விபத்தில் பேருந்து இரண்டாக உடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே தாய்லாந்தின் சாலைகள் பயணிப்பதற்கு மிகவும் ஆபத்தானவை. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி தாய்லாந்தில் வருடம் தோறும் 24 ஆயிரம் பேர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
Loading...