இந்திய அணிக்கெதிரான இறுதிப் போட்டியின் போது டிரஸிங் ரூமில் கதறி அழுததாக வங்கதேச வீரர் தற்போது கூறியுள்ளார்.
இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்றது.
இதில் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது, வங்கதேச அணி வெற்றி வாய்ப்பிற்கு அருகில் நெருங்கிய போதும், தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் வங்கதேச அணி தோல்வியை சந்தித்தது.
இதனால் வங்கதேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணி சார்பில் கடைசி ஓவரை வீசிய Soumya Sarkar ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் நான் பந்து வீசியதே கிடையாது. தற்போது அந்த அனுபவத்தை பெற்றுள்ளதால், இனி டி20 போட்டிகளில் இது போன்ற சூழ்நிலை வந்தால் எப்படி கையாள வேண்டும் என்ற எண்ணம் கிடைத்துள்ளது.
முதலில் நாங்கள் தோல்வியடைந்தால், அது மோசமான தோல்வியாக இருக்கும், ஆனால் சமீபகாலங்களில் எங்களின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. டி20 போட்டிகளில் 200 ஓட்டங்கள் குவிக்கிறோம், அதுமட்டுமின்றி அதிகப்படியான ஓட்டங்களை சேஸ் செய்கிறோம்.
இதைப் பார்க்கும் போது எங்களின் ஆட்டம் முன்பை விட தற்போது சிறப்பாகவே உள்ளது என்று கூறுவேன்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது தினேஷ் கார்த்திக் அற்புதமாக சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
ஆனால் நானோ போட்டி முடிவுக்கு பின்பு டிரஸிங் ரூமில் கண்ணீர் விட்டு அழுதேன், மிகவும் உணர்ச்சிவசப்படேன். சிறிது நேரத்திற்கு பின்பு பழைய நிலைமைக்கு வந்தாலும், இதைப் பற்றி நினைக்கும் போது வருத்தமாகவே உள்ளது.
நான் அன்று நன்றாக பந்து வீசியிருந்தால் எங்கள் நாட்டில் உள்ள 16 கோடி மக்களை சிரிக்க வைத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.