சிறையில் இருந்து வெளியே வந்து எம்ஜிஆரைப் போல கூட்டம் கூட்டி காட்டுவேன் என தனது உறவினர்களிடம் சசிகலா சபதம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடராஜன் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் அவர் மனைவியான சசிகலா 15 நாள் பரோலில் பெங்களூர் சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார்.
தஞ்சாவூரின் விளார் கிராமத்தில் நடராஜனால் கட்டப்பட்ட பங்களாவில் தங்கியுள்ளார் சசிகலா.
அங்குள்ள உறவினர்களிடம் தனது அரசியல் நகர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது, நேரம் வரும்போது நமக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் நம்மை நோக்கி வருவார்கள்.
இப்போது நமக்குச் சூழல் சரியில்லை. கணக்குப்படி பார்த்தால் இன்னும் 3 ஆண்டுகள் எனக்கு சிறைத் தண்டனை நிலுவையில் இருக்கிறது. நன்னடத்தை காரணமாக, இரண்டு ஆண்டுகளில் நான் வெளியே வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பின்னர் எம்.ஜி.ஆர் திரட்டிய கூட்டத்தை நாம் திரட்டுவோம் நமக்குத்தான் மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிப்போம்.
நமக்கான நேரம் வந்தே தீரும் என பேசியுள்ளார்.