பிரபல தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
பல சர்ச்சைகளுக்கு நடுவில் ஒரு வழியாக நிகழ்ச்சியை நியாயமான முறையில் முடித்தார்கள். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்கள். ஆனால் சிலர் செய்த நியாயமற்ற செயல்களால் அவர்கள் மட்டும் கெட்ட பெயரை எடுத்துள்ளார்கள்.
மேலும், தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை தொடங்க உள்ளார்களாம். வரும் ஜூன் மாதம் இரண்டாம் பாகம் தொடங்க இருக்கிறதாம். சூர்யா அல்லது அரவிந்தசுவாமி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என தகவல்கள் முன்பே வெளியாகியது.
ஆனால் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்பு ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். தற்போது அடுத்த சீசனை நானி தொகுத்து வழங்கப்போவதாக கூறப்படுகிறது.