யாழ்ப்பாணம் வந்த நடிகர் ஆர்யாவுடன் புகைப்படம் எடுக்க முற்பட்ட இளைஞர்களை அவமதித்து விட்டு சென்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டை யாழ்ப்பாண இளைஞர்கள் முன்வைத்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா இன்றைய தினம் (23-03-2018) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் மானிப்பாய் வீதியில் உள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.
வானொலி ஒன்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றிற்கு இலங்கைக்கு வந்திருந்த நிலையில் இன்று யாழ்ப்பாணம் முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் நடிகர் ஆர்யாவுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.
எனினும் நடிகர் ஆர்யா அவ்விடத்தில் இருந்து விரைவாக நகர்ந்து சென்றதாக சம்பவ இடத்திலிருந்த யாழ்ப்பாணம் இளைஞர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியதுடன். மதராசபட்டிணம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.