கனடாவில் நோய்வாய்ப்பட்ட தாய் உயிரிழக்க சில நாட்களே இருந்த நிலையில் அவர் கண் எதிரிலேயே மகளின் திருமணம் நடைபெற்றுள்ளது.
கனடாவின் ஒன்ரோறியாவை சேர்ந்தவர் ஜார்டன். இவருக்கும் செலிசா ஹார்பர் (24) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் ஆனது. ஜார்டனும் செலிசாவும் தங்கள் திருமண திகதியை இன்னும் முடிவு செய்திடாத நிலையில் செலிசாவின் அம்மா கிம் ஷிர்யுட்டுக்கு தீடீரென உடல் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள போர்ட் எரி மருத்துவமனை மருத்துவர்கள் கிம் ஒரு வாரம் தான் உயிரோடு இருப்பார் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தாய் தனது திருமணத்தை பார்க்க வேண்டும் என எண்ணிய செலிசா கிம் சிகிச்சை பெற்று வரும் போர்ட் மருத்துவமனையிலேயே ஜார்டனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
அதன்படி 24 மணி நேரத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை ஜார்டன் – செலிசாவின் திருமணம் கிம் கண் முன்னால் நடைபெற்றது.
மகளின் திருமணத்தை பார்த்து கிம் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்நிலையில் நேற்று இரவு கிம் உயிரிழந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.