Loading...
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் பெண்கள் அணிகள் மோதும் 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.
Loading...
பாக்கிஸ்தான் பெண்கள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த 20 ஆம் திகதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் விளையாடி வருகின்றது. இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2 ஒருநாள் போட்டிகளில், பாக்கிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று 3 ஆவது ஒருநாள் போட்டி ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமான 3 ஆவது போட்டியில் முதலாவதாக களமிறங்கிய பாக்கிஸ்தான் பெண்கள் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து இலங்கை அணி துடுப்பாடவுள்ளது
Loading...