Loading...
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் உள்ள லவுசாட்ஸ் நகரை சேர்ந்த 37 வயதுடைய ரொமானா கேனெட் என்ற பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையில் குளியலறை தொட்டியில் குழந்தை பெற்றுள்ளார்.
இதனையடுத்து பிறக்கும் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதே போன்று 5 குழந்தைகளை கொன்றுள்ளார். குழந்தைகளின் உடல்களை பொலிதீன் பையில் போட்டு குளிர்சாதன பெட்டியில் ஒளித்து வைத்துள்ளார்.
Loading...
இந்நிலையில் ஒரு குழந்தையின் உடல் அவரது மகளின் கண்ணில் பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கொடூர விடயம் வெளிச்சத்திற்கு வந்து மீதி 3 குழந்தைகளின் உடல்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
அவரை கைது செய்த பொலிசார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Loading...