Loading...
யாழ் வலிகாமம் கிழக்கு பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கோப்பாய் மீன் சந்தை கட்டிடம் வட மாகாண முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனின் இருபது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
Loading...
வலி கிழக்கு பிரதேச சபை செயலாளர் யுகராஜா ஜெலீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மீன் சந்தையினை சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார்.
இதில் மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Loading...