அரசியல் இலாபத்திற்காக, நாட்டை குழப்பி ஆட்சி பீடத்தைக் கைப்பற்றுவதற்காக சில அரசியல் தலைமைகள் செயற்பட்டு வருவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இவர்களின் கனவுகள் முறியடிக்க அனைத்து மக்களும் ஒன்றினைந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி சங்கமன் கிராம 50வது மாதிரி வீட்டுத் திட்டத்தினை நேற்று வெள்ளிக்கிழமை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்இ வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவே ஸ்ரீலங்காவிற்கான அடுத்த சிறந்த தலைவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.