தமிழ் சினிமாவின் தல எனப்படும் நடிகர் அஜித் குமாரை நரசிம்மா விஜயகாந்த் ரேஞ்சுக்கு குத்திக்காட்டியுள்ளார் ஒரு தயாரிப்பாளர்.
சமீபத்தில் வெளிவந்த விவேகம் குறித்து கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இந்த குத்திக்காட்டலை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த பேச்சில் அவர், விவேகம் திரைப்படத்தில் எந்தக் கன்றாவியும் இல்லை என குறைப்பட்டுள்ளார்.
கே.ராஜன் என்ற தயாரிப்பாளரே தனது மன வெளிப்பாட்டைக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் நிலை குறித்து பேசியபோது சினிமாவைக் கெடுப்பதே இயக்குனர்கள்தான் என்று காரசாரமாக கூறியுள்ளார்.
குறிப்பாக விவேகம் படத்தில் அஜித் குமாரை நூறு பேர் சுடுவார்கள், அவருக்கு எதுவுமே ஆகாது. ஆனால் அஜித் குமார் நூறு பேரைச் சுடுவார் எல்லோருமே இறந்துவிடுவார்கள்.
இதற்காக அவர்கள் செலவு செய்தது மிகப்பெரிய தொகை என்றும், அஜித் குமார் நல்லவர்தான் ஆனால் படம் எடுத்த விதம் மிகவும் மோசமானது எனவும் பேசியுள்ளார்.