அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும், இவ்வாறான விமான சேவை முன்னெடுக்கப்படாத நிலையில் அவுஸ்திரேலியாவின் அரச விமான சேவை நிறுவமான குவான்டஸ் இந்த பரிட்சார்த்த நடவடிக்கையை முன்னெடுத்தள்ளது.
இதற்கமைய, அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிலிருந்து புறப்பட்ட விமானம் எங்கும் நிற்காமல் பிரித்தானியாவில் இன்று காலை தரையிறங்கியுள்ளது.
இந்த பரிட்சார்த்த சேவைக்கு போயிங் 789-7 ரக விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், வெற்றிகரமாக எங்கும் நிறுத்தாமல் 17 மணித்தாலங்களில் பிரித்தானியாவை வந்தடைந்துள்ளது.
சுமார் 14 ஆயிரத்து 498 கிலோ மீற்றர்கள் கொண்ட தூரத்தை 17 மணித்தியாலங்களில் கடந்து பிர்ததானியாவை குறித்த விமானம் வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.
இதன் மூலம் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் விமானப்போக்குவரத்தில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குவான்டஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி அலன் ஜோய்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1947 ஆம் ஆண்டிலிலிருந்து இதுவரையான காலப்பகுதி வரை பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான விமான பயணம் 4 நாட்கள் கொண்டதாக அமைந்திருந்ததுடன், இது கங்காரூ பாதை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் இந்த வரலாற்றை மதாற்றயமைக்கும் வகையில் சுமார் 200 பயணிகளுடன் பெர்த்திலிருந்து குறித்த விமானம் பிர்த்தானியாவை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.