இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில், மாத வாடகையாக, ரூ.15 லட்சம் கொடுத்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, காதல் மனைவிக்காக புதிய வீடு தேடி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, நீண்ட காலம் காதலித்த பிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்தார்.
தற்போது மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள, பிரபலங்கள் வசிக்கும், மிக பிரம்மாண்டமான அப்பார்ட்மென்டின், 40வது தளத்தில், 2,675 சதுர அடி உள்ள பிளாட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இதற்காக மாத வாடகையாக, ரூ.15 லட்சம் கொடுத்து வருகிறார்.
தற்போது அங்கிருந்து வேறு பகுதிக்கு மாறும் பொருட்டு பாந்த்ரா மற்றும் வர்சோவா இடையே, கடல் அழகை ரசிக்கக் கூடிய அளவில் உள்ள, மிகவும் பிரம்மாண்ட பென்ட்ஹவுசை கோஹ்லி தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.