Vivo நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக காணப்படுகின்றது.
இந்நிறுவனம் விரைவில் Vivo V9 எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
முற்றிலும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone X கைப்பேசியினை ஒத்திருக்கும் இக் கைப்பேசியானது 6.3 அங்குல அளவுடைதும், 2280 x 1080 Pixel Resolution உடையதுமான FHD+ திரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Qualcomm Snapdragon 626 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் 24 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 5 மற்றும் 16 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்கள், 3260 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இக் கைப்பேசியானது கூகுளின் Android 8.1 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.