கருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்தரமாக போக்க முடியும்.
அதுவும் நம் வீட்டில் உள்ள சில எளிமையான பொருட்களைக் கொண்டு எளிதில் நீக்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தினால், ஒரே இரவிலேயே நீங்கள் மாற்றத்தை உணரலாம்.
கற்றாழை
கற்றாழை இலையை வெட்டி, அதனுள் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கண்களுக்கு அடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுங்கள்.
கற்றாழை சருமத்தில் வறட்சியைப் போக்கி, சரும செல்களுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்து, கண்களுக்கு அடியில் உள்ள சருமத்தை இறுக்கமடையச் செய்யும்.
புதினா
ஒரு கையளவு புதினா இலைகளை நீர் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை கண்களைச் சுற்றித் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு படுக்கும் முன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், சரும கருமையைப் போக்க உதவும். மேலும் உருளைக்கிழங்கு கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தையும் குறைக்கும். அதற்கு உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் 1 மணிநேரம் வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துருவி, கண்களைச் சுற்றி வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.