Loading...
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீத்தா அம்பானி. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். அதில் முதல் மகன் ஆகாஷ் அம்பானி.
ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தா – மோனா மேத்தா தம்பதியரின் இளைய மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இந்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்குள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது என செய்திகள் வெளியாகின.
Loading...
முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஒன்றாக படித்த காலத்தில் இருந்து நண்பர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...