2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனைத் தெரிவித்துள்ளார்.
பரீட்சைப் பெறுபேறுகளை அன்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் ஏற்றப்படும்.
அடுத்த நாள் கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும்.
ஏனைய பாடசாலைகளுக்கு அஞ்சலில் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.