நடிகர் ஆர்யாவை மையமாக வைத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இலங்கையில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆா்யாவை திருமணம் செய்யும் போட்டியாளா்களின் வரிசையில், ஒருவராக இலங்கையைச் சேர்ந்த சுசானா இருக்கும் நிலையில் யாழ்ப்பாணம் அனைலைதீவு பகுதியில் உள்ள சுசானாவின் வீட்டிற்கு ஆா்யா நேற்றைய தினம் சென்றுள்ளாா்.
அங்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து ஆர்யாவை வரவேற்ற நிலையில் ஆர்யாவுக்கு அருகாமையில் ஒரு கையில் மின் விசிறியும், மறு கையில் குடையும் பிடித்துக் கொண்டு நபர் ஒருவர் வந்துகொண்டிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதோடு அவரையும், ஆர்யாவையும் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர் தமிழ் இளைஞர்கள்..