வயல்வௌி ஒன்றில் யுவதி ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம் வெயங்கொட பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவர், யுவதியின் சடலம் இருப்பதனை அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார், சடலத்தை அடையாளப்படுத்தும் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது யுவதியின் சடலத்தில் வெட்டு காயங்கள் காணப்பட்டுள்ளது, அவரை யாராவது கொலை செய்துவிட்டு குறித்த பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகித்துள்ளது.
இதேவேளை, குறித்த யுவதி மற்றும் ஓர் பிரதேசத்தில் இருந்து வெயங்கொடை பிரதேசத்திற்கு தொழிலுக்காக வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் இருந்து அறியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.