ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றி ரசித் கான் சாதனை!
உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றுப்போட்டிகள் தற்போது ஜிம்பாவேயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வந்த சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது 43 வது ஒருநாள் போட்டியில், 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதன்மூலம் 99 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ரசித், இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 44-வது ஒருநாள் போட்டியில், சாய் ஹோப் விக்கெட்டினை கைப்பற்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 52 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததே சாதனையாக இருந்தது.
19 வயதே ஆன ரசித், இதுவரை ஜிம்பாவேக்கு எதிராக 40 விக்கெட்டுகளை, அயர்லாந்து அணிக்கு எதிராக 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.