ஆதாரங்கள் இருந்தும் பேன்கிராப்டுக்கு தடை இல்லை. 2001ல் ஆதாரமே இல்லாமல் 6 பேருக்கு தடை விதித்தனர்.
சிட்னி டெஸ்டிலும் தவறு செய்யாத நிலையில், எனக்கு தடை விதித்தனர். விதிமுறையை ஒவ்வொரு அணிக்கு ஏற்ப ஐ.சி.சி., கடைபிடிக்கிறது
பந்தை சேதப்படுத்திய பேன்கிராப்டுக்கு ஐ.சி.சி., தடை விதிக்காதது குறித்து ஹர்பஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கேப்டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் பேன்கிராப்ட், பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதற்காக பேன்கிராப்டுக்கு, சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாக ஐ.சி.சி, விதித்தது.
இதில் ஐ.சி.சி., அவருக்கு சலுகை காட்டியதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2001ல் போர்ட் எலிசபெத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் போது இந்தியாவின் சச்சின் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அப்போது கங்குலி அணியை கட்டுப்படுத்த தவறியது மற்றும் அளவுக்கு அதிகமாக அப்பீல் செய்ததாக சேவக், ஹர்பஜன், சுந்தர் தாஸ், தீப் தாஸ் குப்தா 6 பேருக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
பின் 2008ல் சிட்னியில் நடந்த டெஸ்டில், சைமண்ட்சை பார்த்து குரங்கு என ஹர்பஜன், இனவெறியை துாண்டும் விதமாக திட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதில், ஹர்பஜனுக்கு 3 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இந்த இரு சம்பவங்களை தெரிவித்துள்ள ஹர்பஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,’ ஆதாரங்கள் இருந்தும் பேன்கிராப்டுக்கு தடை இல்லை. 2001ல் ஆதாரமே இல்லாமல் 6 பேருக்கு தடை விதித்தனர். சிட்னி டெஸ்டிலும் தவறு செய்யாத நிலையில், எனக்கு தடை விதித்தனர். விதிமுறையை ஒவ்வொரு அணிக்கு ஏற்ப ஐ.சி.சி., கடைபிடிக்கிறது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.