முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, ஈரான் நாட்டு யுவதியான ஓறியா (Oorea) என்வரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இந்த திருமணம நிகழ்வு கல்கிஸ்சையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெற்றுள்ளது.
குறித்த திருமண வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் மாலக்க சில்வா – ஓறியா தம்பதிகளுக்கு அரசியல் பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்கள் என பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஈரான் நாட்டு யுவதியை மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா திருமணம் செய்தது குறித்து பல விவாதங்களும் இடம்பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.