ஆர்யா ஈழத் தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை இன்பகரமாக அமையும்; பிரபல நடிகை!
ஆர்யா யாழ்ப்பாணப் பெண்ணான சுசானாவை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை இன்பகரமாக அமையும் என்று நடிகை சுஜிதா கூறியுள்ளார்.
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகை சுஜிதா போட்டி ஒன்றை வைத்து அதில் ஒரு பெண்னை தெரிவு செய்துவிட்டு, குறித்த பெண் ஆர்யாவிற்கு ஒரு சிறந்த தாயாக இருப்பார் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் சுஜிதா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத சுசானா இன்ப அதிர்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
சுசானா இந்த குறித்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், இனி வரும் போட்டிகளில் அவரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியில், தொடர்ந்து டாஸ்க் கொடுக்கப்படும். இறுதி நிமிடம் வரை ஆர்யாவிற்காக போராடுபவரைதான் ஆர்யா திருமணம் செய்யவுள்ளார்.
பொருத்திருந்து பார்ப்போம் ஆர்யா யாரை திருமணம் செய்ய போகின்றார் என்று. குறித்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.