ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியா அணிகள் மோதிய உலக கிண்ண தகுதி இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிக்கான தகுதி பெற்ற அணிகளை விட ஏனைய அணிகளுக்கான தகுதி போட்டிகள் கடந்த 4 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வந்துள்ளது. இப் போட்டியில் நடைபெற்ற தொடர்களின் அடிப்படையில் இறுதி போட்டியில் நேற்றைய தினம் மேற்கிந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியுள்ளன.
இறுதி போட்டியில் முதலாவதாக களமிறங்கிய மேற்கிந்தியா அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இந்து 204 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 40.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுக்களால் மேற்கிந்தியா அணியை வெற்றி பெற்றுள்ளது.
இதனடிப்படையில் உலக கிண்ண போட்டிக்குள் மேற்கிந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நுழைந்துள்ளன.