யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில் ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், நேற்று மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கடைமீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிச்சென்றுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன், பெற்றோல் குண்டு வெடித்தினால் கடை சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், தனிப்பட்ட தகறாறே இத்தாக்குதலை மேற்கொள்ள காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.