ரொறொன்ரோவில் இருந்து வாஷிங்டன் டிசி நோக்கி சென்ற எயர் கனடா விமானம் பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அவசரமாக ஓடுதளத்திற்கு செல்ல வேண்டிய நிலைமைக்கு ஆளானதாக அறியப்படுகின்றது. விமானியின் அறையில் ஏற்பட்ட புகையே இந்த அவசர நடவடிக்கைகளிற்கு காரணம்.
எயர் கனடா சார்பாக ஸ்கை பிராந்தியத்தால் இயக்கப்பட்ட குறிப்பிட்ட விமானம் ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த ஞாயிற்றுகிழமை மாலை 4.51-மணியளவில் புறப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் விமானிகள் காக்பிட்டில் புகை ஏற்பட்டதை கண்டுள்ளனர். இதன் காரணமாக றீகன் தேசிய விமானத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் டல்லாஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
விமானத்தில் பயணித்த 63-பயணிகளும் நான்கு பணிக்குழுவினரும் பாதிப்பு ஏதும் இன்றி வெளியேறினர்.
விமானத்தில் புகை பிடித்ததற்கான காரணம் தெரியவரவில்லை.