ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மோசடி செய்தமை தொடர்பாக லலித்மோடி (Lalit Modi) மீதான வழக்கை சி.பி.ஐ. பொலிஸுக்கு மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தலைவராக இருந்த லலித்மோடி 470 கோடி ரூபா நிதி மோசடி செய்தமை காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக இருந்த சீனிவாசன் சென்னை பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார்.
அதில் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்ப தொலைக்காட்சி உரிமம் வழங்கியது, இலவச வர்த்தக விளம்பரம் செய்தது, பாதுகாப்பு ஏற்பாடு ஆகியவற்றில் மோசடி செய்தமை தொடர்பில் லலித்மோடி உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படிருந்தது.
இதன் முதல் கட்ட விசாரணையை தொடர்ந்து வழக்கில் வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்ட்டது.
இந்நிலையில் லலித் மோடி மீதான வழக்கை சி.பி.ஐ. பொலிஸாருக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் வழக்கின் ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் வழங்கப்படாததால் இதுதொடர்பான விசாரணையை இன்னும் ஆரம்பிக்கவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.