வெளிநாட்டு பெண்ணொருவரின் செயற்பாடு மக்களை நெகிழ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்ட பெண் ஒருவரின் செயற்பாடு இவ்வாறு மக்களை நெகிழ வைத்துள்ளது
மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கைவிடப்பட்ட இளைஞன் ஒருவருக்கு பெண்ணொருவர் உதவி செய்துள்ளார்.
அனாதையாக கைவிப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் வேம்படி சந்தியின் தெருவோரத்தில் வசித்து வரும் இளைஞருடன் குறித்த பெண் உரையாடியுள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞனுடன் பேசும் வெளிநாட்டுப் பெண், உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கியுள்ளார் அத்துடன், அருவருடன் அருகில் இருந்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.வெளிநாட்டு பெண்ணின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள மக்களின் இயலாமை குறித்து வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.