ரயில் படிக்கட்டில் பயணம் செய்த பயணி கீரே விழுந்ததால் அவசரகால செயின் இழுத்தும் 75 கி.மீ தள்ளி நின்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்பட்டது பொதிகை எக்ஸ்பிரஸ். இதில் தென்காசியை சேர்ந்த காக்கும் பெருமாள் என்பவர் கொத்தனார் வேலை பார்த்துவிட்டு வீடும் திரும்ப ரயிலில் தன் நண்பர்களுடன் பயணம் செய்துள்ளார். ரயில் செங்கல்பட்டை தாண்டி ஒட்டிவாக்கம் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் காக்கும் பெருமாள் ரயிலின் படிக்கட்டு பகுதியில் நின்று கொண்டிந்தபோது எதிர்பாராமல் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அவரின் நண்பர்கள் அவசரகால செயினை இழுத்துள்ளார்கள். தொடர்ந்து இழுத்தும் நிற்காத ரயில் அருகில் இருக்கும் பெட்டிகளின் செயினையும் இழுத்துள்ளார்கள்.
இதைதொடர்ந்தும் நிறுத்தாத ரயில் 75 கி.மீ தாண்டி விழுப்புரத்தில் நின்றுள்ளது. இதனால் பதறிபோன காக்கும் பெருமாளின் நண்பர்கள், கீழே விழுந்து உயிருக்கு போராடிய நண்பனை தேடி சென்றுள்ளனர்.
அவசரகால செயினை இழுத்து நிற்காமல் சென்ற ரயில், தீ விபத்து ஏற்பட்டிருந்தால் இப்படிதான் நிற்காமல் செல்லுமா என்று வேதனையுடன் தெரிவித்தனர்.