கனேடியர்களின் முகநூல் தரவுகள் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து, பெரும்பாலான கனேடியர்கள் தங்களது முகநூல் கணக்கை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.
கணக்குகளை அழித்துவிடக் கோரும் இணைய இயக்கம் ஒன்று மக்களை ஊக்குவித்துவருவதன் பின்னணியில், இந்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாக ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்ப் தரப்பிற்காக செயற்பட்ட நிறுவனம் ஒன்று 50 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தரவுகளை எடுத்து அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ஒன்ராறியோ ரகசிய பாதுகாப்பு ஆணையகம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.