எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள உலக தொழிலாளர் தின நிகழ்வுகளை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி குறித்த தொழிலாளர் தின நிகழ்வுகளை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை ஒத்திவைத்து அன்றைய நாளில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் முதலாம் திகதியானது பௌர்னமி நாளாக விளங்குகின்றது. பௌத்தர்களின் மத அனுட்டானங்களின்படி மே மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினமானது பௌத்த மதத்தை தழுவுபவர்களுக்கு முக்கியமான பௌணர்மி தினமென கூறப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் அவர்கள் ஊர்வலங்களையோ ஒன்றுகூடல்களையோ விரும்புவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மஹா சங்கரத்ன தேரர்களினால் இதுதொடர்பான கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைவாகவே தொழிலாளர் தின நிகழ்வுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.