இலங்கையின் ஊவா மாகாணம் பதுளை மாவட்டம், எல்ல பகுதியில் அபுதாபியைச் சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணவர்விற்கு உட்படுத்த முயற்சித்ததாகவும் அவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் மாலை வேளையில் இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தாம் மடக்கிப் பிடித்ததாக குறிப்பிட்டனர்.
இதுதொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் குறித்த பெண் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியில் வந்த குறித்த இளைஞர் பாலியல் வன்புணர்விற்குட்படுத்த முயற்சித்துள்ளார். குறித்த பெண்ணை மறித்த அவர், தனது முச்சக்கரவண்டியினுள் அவரை இழுத்து சேட்டைகள் புரிவதற்கு எத்தனித்தபோதும் குறித்த பெண் லாவகமாக தப்பியுளார் என முறைப்பாடு பதிவாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த பெண், பொலிஸ் நிலையம் சென்று தனக்கு நேர்ந்த அவலம் குறித்து முறைப்பாடு பதிவு செய்ததாகவும் அவர் வழங்கிய தகவலுக்கமைய சந்தேக நபர் கதாகியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சந்தேக நபராகிய இளைஞர், உணவகம் ஒன்றில் பிரதான சமையல் கட்டுபாட்டாளராக கடமையாற்றி வருகின்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.