பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. கேப்டன் ஸ்மித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி, இருவரும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டனர். இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஸ்மித் கேப்டன் பதவி, வார்னர் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ஸ்மித்திற்கு ஒரு டெஸ்ட்டில் தடை, சம்பளத்தில் 100% அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை நாடு திரும்ப ஆஸ்திரேலிய கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக மேட் ரென்ஷா, ஜோ பர்ன்ஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கேப்டனாக டிம் பைனி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை கிரிக்கெட் ஆஸ்திரேலிய தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் உறுதிப்படுத்தினார்.
ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் லீமேன் பதவி விலகவில்லை. எனவே அவரே பதவியை தொடருவார்.
அணியில் இருந்து நீக்கப்பட்ட மூவருக்கும், 24 மணி நேரத்தில் தண்டனை அறிவிக்கப்படும் என்று ஜேம்ஸ் சதர்லாண்ட் தெரிவித்தார்.