Loading...
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் எல்ரீரீஈ உறுப்பினர்களின் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தனியார் துறையில் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் எல்ரீரீஈ உறுப்பினர்கள் 97 பேருக்கு தனியார்துறையில் தொழில்வாய்ப்பிற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Loading...
வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு நிலையத்தில் அதன் பணிப்பாளர் நாயகம் டிமிந்த பெஸ்குவல் தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு நடைபெற்றது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட காலப்பகுதியில் இலங்கை தொழில்வாய்ப்பு அதிகாரசபையின் மூலம் நடத்தப்பட்ட பயிற்சிக்கற்கைநெறிகளை அடிப்படையாகக் கொண்டு தனியார் துiறியல் இவ்வாறு தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...