பிரபலமான போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த 3 ஆண்டுகளாக ஆசியா 30 என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது.
30 வயதுக்குள் மாற்றத்தை உருவாக்கியவர்கள், இளம் கண்டுபிடிப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் 30 பேரை ஆசிய அளவில் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறது.
இந்தத் தேர்வு இணையதள வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ். அதில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடம் பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை திருமணம் செய்துகொண்ட பிறகு அனுஷ்கா சர்மாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துள்ளது என்றும், விராட் கோஹ்லியின் வெற்றியில் அனுஷ்கா சர்மாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றும் போர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.
சாதாரண மாடலிங் பெண்ணாக இருந்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியவர் அனுஷ்கா சர்மா என்றும் புகழ்ந்துள்ளது போர்ப்ஸ்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் அனுஷ்கா சர்மாவுக்கு விராட் கோஹ்லியை திருமணம் செய்த நேரம் புகழைக் கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டில் உலகில் அதிகமானோர் கவனித்த திருமணம் கோஹ்லி – அனுஷ்கா திருமணம் தான்.
அவர்களது திருமண புகைப்படம் தான் கடந்த ஆண்டின் கோல்டன் ட்வீட்டாக சிறப்பு பெற்றது. இருவருமே அவரவர் துறைகளில் உயரம் தொடுவார்கள் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.