பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் வார்னர், ஒருவழியாக வாயை திறந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் பேன்கிராப்ட், பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதற்காக பேன்கிராப்டுக்கு, சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாக ஐ.சி.சி, விதித்தது.
கேப்டன் ஸ்மித் ‘லீட்ர்ஷிப் குழு’வுக்கு தெரிந்தே இந்த செயல் நடந்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய கிரிக்கெட் ஆஸ்திரேலிய குழு, பந்தை சேதப்படுத்த திட்டம் போட்டுக்கொடுத்த ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு தடைவிதித்தது. பேன்கிராப்ட்டுக்கு 9 மாதம் தடைவிதித்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு, நான் சிட்னி திரும்பிக்கொண்டுள்ளேன்.
தவறு நடந்து விட்டது. எனது பங்கிற்காக நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் நேசிக்கும் கிரிக்கெட் மீது கரைபடிந்துவிட்டது. தற்போது குடும்பத்துடனும் நம்பிக்கையான ஆலோசகர்களுடனும் நேரம் செலவிடவுள்ளேன். இன்னும் சில நாட்களில் சந்திக்கிறேன்.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.