பந்தை சேதப்படுத்திய அவுஸ்ரேலியா வீரர்களுக்கு தடை விதித்த தண்டனை சரியானது என இந்தியா கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கார் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியா அணி வீரர் பான்கிராப்ட், அணித்தலைவர் ஸ்மித்தின் அனுமதியுடன் பந்தை சேதப்படுத்தியுள்ளார். மேலும் இதற்கு துணைத்தலைவர் வார்னர் மூல காரணமாக காணப்பட்டுள்ளார்.
இதனால் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக பான்கிராப்ட்டிற்கு 9 மாத தடையும், வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு 1 வருட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியா கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கார் தெரிவித்துள்ளதாவது, “கிரிக்கெட் என்பது நேர்மையான விளையாட்டு, அதனை தவறியதால் அவுஸ்ரேலியா வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்ட தண்டனை சரியானது. மேலும் இதனால் இது போன்ற தவறுகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாது.” என தெரிவித்துள்ளார்.