பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்ரேலியா அணியின் பயிற்சியாளர் லீமேனின் பதவிக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகளிலும் அவுஸ்ரேலியா அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இறுதியாக நடைபெற்ற 3 ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா அணி வீரர் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக அவுஸ்ரேலியா அணித்தலைவர் ஸ்மித்திற்கும், துணைத்தலைவர் வார்னருக்கும் 1 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவுஸ்ரேலியா அணியின் பயிற்சியாளருக்கும் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பயிற்சியாளர் லீமேனிற்கு தொடர்பு இல்லை என தெரியவநதுள்ளதால், அவரது பதவிக்கு ஆபத்து இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.