அமெரிக்கா தான் தயாரித்துள்ள 4காம் தலை முறை அதி நவீன ஆயுதங்களை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. இவற்றில் மிகவும் சக்த்திவாய்ந்த ஆயுதமாக கருதப்படும் “ட்றோன் கில்லர்” எனப்படும் துப்பாக்கி முதன்மையானது ஆகும். ஒரு யுத்த களத்தில் எதிரியின் நிலையைக் கண்டு பிடித்து. எதிரிகளை பலமிழக்கச் செய்ய பயன்படுத்தப்படுவது ஆளில்லா விமானங்களே ஆகும்.
பல போர் முடிவுகளை மாற்றி அமைப்பதும் இந்த ஆளில்லா விமானங்களே ஆகும். எனவே போர் முனையில் பறக்கும் எதிரி நாட்டு ஆளில்லா விமானங்களை ஒரு செக்கனில் செயல் இழக்கச் செய்து. அதனை நிலத்தில் வீழ்த்த வல்ல புது ரக லேசர் துப்பாக்கிகளை அமெரிக்கா கண்டு பிடித்துள்ளது. இதனையே அவர்கள் தற்போது பரிசோதனை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
சமீபத்தில் ரஷ்யா பெரும் போர் ஒத்திகை ஒன்றை நடத்தி, தனது ஆயுதங்களை காண்பித்தது. ஆனால் அமெரிக்காவோ தன்னிடம் உள்ள அதி நவீன 4ம் தலை முறை ஆயுதங்களை காண்பித்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.