யாழ்ப்பாணம் – பண்ணை கடற்கரை சுற்றுலாப் பயணிகளுக்கான மற்றுமொரு கடற்கரையாக அபிவிருத்தி செய்ய வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடற்கரையை அபிவிருத்தி செய்ய 18 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவியை பெற்றுக்கொள்ளவும் மாகாண சபை தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகர் வீதியில் அமைந்துள்ள கசூரினா கடற்கரை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த அழகிய இடமாக இருந்த போதிலும் அது யாழ் நகரில் இருந்து தூரத்தில் இருப்பதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல மறுத்து வருவதாக வடக்கு மாகாண சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமையில், யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை யாழ் நகருக்கு அருகில் இருப்பதால், இரண்டாவது கடற்கரையாக அபிவிருத்தி செய்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக மாற்றி வெளிநாட்டு அந்நிய செலாவணியை ஈட்ட வடக்கு மாகாண சபை எதிர்பார்த்துள்ளது.