மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலை, மிளகாய், கத்தரி, வெங்காயம், வெண்டி, உள்ளிட்ட, பலவகையான மேட்டுநில விவசாயச் செய்கைக்குப் பெயர்போன கிராமமாகக் காணப்படுவது களுதாவளைக் கிராமமாகும்.
கடற்கரை அண்டிய கரையோரத்தை பதியில் மாட்டொரு உள்ளிட்ட இயற்கை மற்றும் செயற்கை உரவகைகளைகளையும், பயன்படுத்தி மிக நீண்ட காலமாக அக்கிராம மக்ககள் மேட்டுநில விவசாயச் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊடகத்துறைக்குப் பயன்படுத்தும் நேரத்தைத் தவிர மிகுதியான நேரங்களில் மேற்படி மேட்டுநில விவசாயச் செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றார் ஊடகவியலாளர் சக்திவேல்.
இதேவேளை ஊடவியலாளர் சக்திவேல் மலை நாட்டுப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்படும் மரக்கறிவகைகளான கோவா, கரட், போஞ்சி, நோக்குட், உள்ளிட்ட பயிர்களையும், பரிட்சாத்தமாக மேற்கொண்டு வெற்றிகண்டுள்ளார்.
தாம் இதுவரையில் செய்து வந்த மரக்கறிகறி வகைகளுக்கு அப்பால் மேலதிகமாக மலைநாட்டு மரக்கறி வகைகளில் சிலவற்றை ,இம்முறை பரீட்சாத்தமாக மேற்கொண்டுள்ளேன். இது எனக்கு வெற்றியளித்துள்ளது.
எதிர்காலத்தில் இவற்றை மேலும் விஸ்த்தரித்துச் செய்கைபண்ணலாம் என ஆலோசித்துள்ளேன் ஊடகத்துறையை நான் எவ்வாறு நேசிக்கின்றேனோ அவ்வாறுதான் விவசாயத்தையும் நேசிக்கின்றேன். காலை மற்றும் மாலை வேளைகளில் எனது நேரத்தை எனது தோட்டத்தில் கழிப்பேன் என ஆர்வத்துடன் தெரிவிக்கின்றார் ஊடகவியலாளர் சக்திவேல்.