மோட்டார் சைக்கிளில் வீதியில் சென்று கொண்டிருந்த ஆசிரியையின் இரண்டரைப் பவுண் சங்கிலியை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர்கள் அறுத்துக்கொண்டு ஓடித்தப்பினர் என்று முறையிடப்பட்டது.
இந்தச் சம்பவம் ஆவரங்கால் கிழக்கில் யாழ்–பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றது. அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலையில் கற்பிக்கும் ஆசிரியை பாடசாலை முடிந்து ஆவரங்கால் கிழக்கிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் போது அவரைப் பின்தொடர்ந்த இருவர் சன நடமாட்டம் இல்லாத இடத்தில் சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகின்றது.
தனது சைக்கிளில் இருந்து விழுந்த ஆசிரியை படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.