Loading...
ஹாங்காங்கின் கெத்தே பசிஃபிக் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானப் பணிபெண்கள் கால்சட்டை அணிந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது.
70 ஆண்டுகளுக்குப் பின், அந்த மாற்றம் அறிமுகம் காணவுள்ளது.
இதுவரை, கெத்தே பசிஃபிக் விமானப் பணிபெண்கள் குட்டைப் பாவாடை அணியவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
Loading...
அது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்யக் கடினமாக இருப்பதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் விமானப் பணிப்பெண்கள் கூறியிருந்தனர்.
விரைவில், கெத்தே பசிஃபிக் தனது விமானப் பணிப் பெண்களுக்கான சீருடையில் மாற்றம் செய்யவுள்ளது. அப்போது அவர்கள் கால் சட்டை அணியும் மாற்றமும் நடைமுறைப்படுத்தப்படும்.
புதிய மாற்றத்தை கெத்தே பசிஃபிக் ஏர்வேஸ் விமானப் பணிபெண்கள் தங்களுக்கான பாதுகாப்பாகக் கருதுகின்றனர்.
Loading...