பந்தை சேதப்படுத்திய குற்றத்தை தான் முழுவதும் ஏற்றுக் கொள்வதாக அவுஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கேப்டவுன் டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா சென்றடைந்துள்ள வார்னர் ஊடகங்களை சந்தித்து கண்ணீர் மல்க மன்னிப்பு கோரினார்.
அவர் கூறுகையில், பந்தை சேதப்படுத்திய குற்றத்தை தான் முழுவதும் ஏற்றுக் கொள்வதாகவும், தடையால் அடுத்து தான் விளையாட வாய்ப்பு கிடைக்குமா, இல்லையா என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், இச்செயலுக்காக ரசிகர்களிடம், குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருவதாகவும், அவுஸ்திரேலியா அணி தன் குடும்பம் போன்றது அதை விட்டு பிரிவது மிகுந்த வேதனை தருகின்றது எனவும் வார்னர் தெரிவித்துள்ளார்.