தன்னால் மனம் உடைந்து போன 9 வயது சிறுவனிடம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியுள்ள அவுஸ்திரேலியா வீரர் ஸ்மித் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி வீரரான பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அவருக்கு ஒன்பது மாதங்கள், அணியின் தலைவர் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டுகள் என தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஸ்மித் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
இதைக் கண்ட கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்கள் பலர் ஸ்மித்திறு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஸ்மித் கண்ணீர் விட்டு அழுததைப் பார்த்த 9 வயது சிறுவன் மிகவும் மனம் உடைந்து போயுள்ளான்.
இது குறித்து அந்த சிறுவனின் தந்தை தெபோரா நைட் தன் டுவிட்டர் பக்கத்தில், என் 9 வயது மகன் ஸ்மித்தின் மிகப்பெரிய ரசிகன், அன்று செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் அழுததைப் பார்த்து மனம் உடைந்து விட்டான். 20 நிமிடங்கள் அவனை ஆறுதல் படுத்த வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டிருந்தார்.