கனடா நாட்டின் டொரான்ட்டோ நகரை தலைமையிடமாக கொண்டு ‘நேக்ட் நியூஸ்’ என்னும் கட்டண செய்தி சேனல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சேனலின் பெயரை மேலோட்டமாக மொழிபெயர்த்தால் ‘ஒளிவுமறைவற்ற செய்தி’ என தான் பொருள்கொள்ள தோன்றும்.
ஆனால், கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வாரத்தில் 6 நாட்கள் அந்தந்த நாட்களின் முக்கிய செய்திகளை அரை நிர்வாணமாகவும், பல வேளைகளில் முழு நிர்வாணமாகவும் தோன்றி தொகுத்து வழங்கும் இளம்பெண்களின்
உடலழகை ரசிப்பதற்காகவே பல லட்சக்கணக்கானவர்கள் கட்டணம் செலுத்தி இந்த சேனலை கண்டுகளித்து வருகின்றனர்.
சுமார் 60 லட்சம் பார்வையாளர்களை தக்கவைத்து கொண்டுள்ள இந்த சேனல் தற்போது ஜப்பான் மொழியிலும் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், தங்களது ரசிகர்கள் பார்த்துப்பார்த்து ரசித்தும், புளித்தும்போன பழைய முகங்களுக்கு பதிலாக நிர்வாண நிலையில் செய்திகளை வாசிக்கவும் தொகுத்து வழங்கவும் புதுமுகங்களுக்கான உடல் தேர்வு மற்றும் குரல் தேர்வு நேர்காணலை நடத்த தொடங்கியுள்ளது.
வரும் ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள் முடிவடையும் இந்த இணையவழி நேர்காணலில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆடைகள் ஏதும் அணியாமல் சுமார் 30 வினாடிகள் வெளியாகும் செய்தி சுருக்கத்தை அனுப்பி வைக்குமாறு ‘நேக்ட் நியூஸ்’ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
இந்த நேர்காணலின் மூலம் பொழுதுப்போக்கு மற்றும் கேளிக்கை துறைக்குள் நுழைய விரும்பும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.