பிரபல நடிகர் ஆர்யா ஒரு பிரபல தொலைக்காட்சியில் திருமணத்திற்காக பெண் தேடுகிறார். இவருக்காக 16 பெண்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த பெண்கள் ஆர்யாவை காதல் செய்வது போலும், ஆர்யாவின் அன்பிற்கு சண்டை போடுவது போலவும் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கிறார்கள். அதிலிருந்த சில பெண்களை எலிமினேட் செய்து வருகிறார். தற்போது 6 பெண்கள் மிஞ்சியிருக்கிறார்கள்.
இதில் ஒருவர் தான் Sriya, இவர் நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இவரது இன்ஸ்டா பக்கத்தில் பல விஷயங்களை பகிர்ந்துவருகிறார் Sriya. அதில் இவர் கூறியதாவது: இந்த நிகழ்ச்சியில் நான் ஆர்யாவிற்காக பங்குகொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சி மூலம் எனது திறமைகளை வெளிக்காட்டி திரையில் வாய்ப்பு பெற்றுக்கொள்வேன்
.எனக்காக பல வாய்ப்புகள் வெளியே காத்துக்கொண்டிருக்கிறது. அது தான் எனக்கான இடம். ஆர்யா எனக்கு வேண்டாம். இதை நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் தருணத்தில் தான் புரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார். மேலும், இவர் அண்மையில் கூட நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் நிகழ்ச்சியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வருவேன் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.