Loading...
ஹெரோயின் வில்லைகளை விழுங்கிக்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த நேபாள நாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 40 ஹெரோயின் வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் மொத்த நிறை 400 கிராம் எனவும் அதன் பெறுமதி 45 இலட்சம் ரூபாவெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்ட துபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த நேபாள பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவரை 7 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய மினுவங்கொட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...